ETV Bharat / state

ஒகேனக்கலுக்கு அடுத்த வாரம் முதல் அனுமதி: மாவட்ட ஆட்சியர் தகவல் - காய்ச்சல் முகாம்

தர்மபுரி: ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு அடுத்த வாரம் முதல் அனுமதி வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டுவருகிறது என மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அடுத்த வாரம் முதல் அனுமதி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தகவல்

author img

By

Published : Sep 8, 2020, 2:22 PM IST

தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு கரோனா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் மலர்விழி பார்வையிட்டார்.

காய்ச்சல் முகாமை ஆய்வுசெய்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர்,

"தருமபுரி மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 501 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர். தற்சமயம் 297 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். கரோனா அறிகுறி தென்படும் முன்பே மாவட்டத்தில் காலை 50 முகாம் மாலை 50 முகாம் என நாளொன்றுக்கு 100 முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.

இதுவரை 3 ஆயிரத்து 221 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு மேல் காய்ச்சல் முகாம் மூலம் பலன் பெற்றுள்ளனர். காய்ச்சல் முகாம்களில் 110 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதால் தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று உயிரிழப்பு குறைந்துள்ளது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கிறார்களா, முகக்கவசம் அணிந்து செல்லுகிறார்களா எனக் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் குறித்து மாவட்டத்தில் முன்பே கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். விசாரணை முடிவில் மாவட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதா இல்லையா என்பது குறித்து இன்னும் சில தினங்களில் தெரியவரும்" என்றார்.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மலர்விழி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.