தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அதியமான் கோட்டை கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். சாம்பல் பூசணியில் மஞ்சள் குங்குமம் தடவி, அதில் விளக்கு வைத்து ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
அதியமான் கோட்டை கால பைரவர் கோயில் சுற்றுப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சாம்பல் பூசணியில் மஞ்சள் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஜிலேபி பவுடரையும் விளக்கேற்றும் எண்ணெய்க்குப் பதிலாக மறுசுழற்சி எண்ணெயையும் பயன்படுத்துவதாக ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியானது.
செய்தி வெளியாகிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது கால பைரவர் ஆலயத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 100 ரூபாய்க்கு தீபத் தட்டுகள் விற்கப்படுகிறது. பக்தர்கள் பார்க்கும் வகையில், அவர்கள் கண் முன்னே மஞ்சள், குங்குமம் இட்டு தீபத்தட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த காலங்களில் தீபத்தட்டு 150 முதல் 200 ரூபாய் வரை, தங்கள் இஷ்டம் போல விலை உயர்த்தி விற்பனை செய்தனர். தற்பொழுது 100 ரூபாய் என நியாயமான விலையில் தீபத்தட்டு விற்பனை செய்கின்றனர். இன்று (ஜன.15)தேய்பிறை அஷ்டமியினை ஒட்டி, கால பைரவர் ஆலயத்தில் தருமபுரி மாவட்ட சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்