அரூர் அருகே உள்ள ஆண்டிபட்டியில், தோ்தல் பறக்கும் படை அலுவலர் சண்முகம் தலைமையிலான அலுவலர்கள் இன்று (மார்ச்4) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.63.800-ஐ எடுத்துவந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை கோட்டாட்சியர் முத்தையனிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட தகவலில் பணத்தை எடுத்துவந்தது ராமியம்பட்டியை சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், “தேர்தல் கட்டுப்பாடு, விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், ஆவணங்கள் இன்றி பரிசு பொருள்கள், பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் எடுத்துச் செல்வதை குறைக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அறந்தாங்கியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்!