தர்மபுரி: ஒகேனக்கலில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதை அறியாத வயது முதிர்ந்த தம்பதியினர் ஆற்றின் நடுவேயுள்ள கோயிலில் மாட்டிக்கொண்டனர்.
கொட்டும் மழையில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கரைசேர முடியாமல் ஆற்றின் நடுவினிலேயே தம்பதியினர் தவித்தனர். இந்தத் தகவலறிந்து வந்த காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி தம்பதியினரை பத்திரமாக மீட்டனர்.
இந்தத் தம்பதியினர், ஒகேனக்கல் அருவிக்குச்செல்லும் நடைபாதையானது பொன்னாகரம் அருகேயுள்ள ஆத்திமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி, பங்காரு அம்மாள் ஆவர். ஆற்றின் நடுவேயுள்ள கோயிலிலேயே வசித்து வரும் இந்தத் தம்பதியினர் வெள்ள அபாய எச்சரிக்கையை அறியாது இருந்ததால் இந்த வெள்ளத்தில் சிக்க நேர்ந்துள்ளது.
மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்புக்காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Exclusive Video:ஒகேனக்கலில் தொங்கு பாலத்தின் மிக அருகே பாய்ந்தோடும் வெள்ளம்!