தர்மபுரி நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலைய கழிப்பிடங்களில் சிறுநீா் கழிக்க ரூ.1-க்குப் பதிலாக ரூ.10 என வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையர் சித்ரா, நகர்மன்றத் தலைவா் லட்சுமி உள்ளிட்டோர் இன்று (நவ.8) தர்மபுரி நகரப் பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் ஆய்வு செய்தனர். முன்னதாக, அதிகாரிகள் ஆய்வு செய்வதை முன்பே அறிந்த ஒப்பந்ததாரர்கள் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரித்து வைத்திருந்தனர்.
நகரப்பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை ஒன்றில் குளியல் அறையில் மின் விளக்குகள் இல்லாமல் இருள் மண்டி கிடந்தது. இதனை அடுத்து நகராட்சி ஆணையர் சித்ரா ஒப்பந்ததாரரிடம் குளியலறையில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், நகரப்பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைத்திருந்த பூக்கடைகளில் பூக்கள் உள்ளிட்டவற்றை நகராட்சிப் பணியாளர்கள் பறிமுதல் செய்து நகராட்சி வாகனத்தை எடுத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் 26 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் - எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவு