தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார் அரூரில் செய்தியாளா்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கான தொகுதி நிதி 5 கோடியில், இரண்டரை கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் தருமபுரியை பொறுத்தவரை ரூ.1.50 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதி ஒரு கோடி ரூபாய் என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.
இதுவரை மாவட்ட ஆட்சியர் அதற்கான பதிலை கொடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் நிதி முழுவதையும் விடுவித்து இருந்தால், தொகுதி முழுவதும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து இருக்க முடியும். மத்திய அரசும், தருமபுரி மாவட்ட ஆட்சியரும் தொடர்ந்து தடையாக இருந்துவருகின்றனர்.
தற்பொழுது நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. மத்திய அரசு ஒரு தேர்வு முடிவுகளைக் கூட தெளிவாக வெளியிடாமல் குளறுபடியாக வெளியிட்டுவருகின்றனர்.
இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் நீட் தேர்வு எந்த லட்சணத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. அரசு நீட்தேர்வு பயிற்சிகளை நடத்தியது. இதில் தற்போது ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற சூழல் உள்ளது. இதனால் தான் திமுக ஆட்சி வந்ததும், எப்பாடுபட்டாவது நீட்டை ரத்து செய்வோம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதனால் தமிழ்நாட்டில் மேலும் 1,200 மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வசதியாக இருக்கும். இதனால் தமிழ்நாட்டிற்கு மேலும் கூடுதலாக 1200 மருத்துவ இடங்கள் கிடைக்கும். எனவே அதனை இந்த ஆண்டு தொடங்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எட்டு வழிச் சாலை வேண்டாம் என்று திமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்துவருகிறது. ஆனால் மத்திய அரசு சுற்றுச்சூழல் அறிக்கை தேவை இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டம் குறித்து செவிசாய்க்காமல் இருந்துவருகிறார். நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். கண்டிப்பாக திமுக ஆட்சிக்கு வரும்போது இந்த எட்டு வழிச் சாலை திட்டம் முழுவதும் கைவிடப்படும்.
தமிழ்நாட்டில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
ஆனால் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்படாத அலுவலர்கள் மீது மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தருமபுரியை பொருத்தவரைக்கும் மாவட்ட ஆட்சியர், அவர்களுடன் (ஊழல் செய்வர்களுடன்) கைகோர்த்து இருப்பார்.
அதனால் தான் தருமபுரி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே தருமபுரி மாவட்ட ஆட்சியரை மாற்ற வலியுறுத்தி முதலமைச்சர், தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுத இருப்பதாக அவர் தெரிவித்தார்.
'மாவட்ட ஆட்சியரை மாற்ற முதலமைச்சருக்கு கடிதம் எழுத இருக்கிறேன்' - எம்.பி. செந்தில்குமார்
தருமபுரி: மக்களவை உறுப்பினர் நிதி என்ன ஆனது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முறையான பதில் கொடுக்கவில்லை. எனவே ஆட்சியரை மாற்ற முதலமைச்சருக்கு கடிதம் எழுத இருக்கிறேன் என மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.