தருமபுரி: நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று (டிச.4) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவா் பேசுகையில், "தருமபுரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தர்மபுரி- மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி.
மேலும், தற்பொழுது இந்த ரயில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், இத்திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி அந்த நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி - மொரப்பூர் இடையே ரயில்பாதை அமையும் இடத்தில் மூக்கனூர் மற்றும் ரெட்டிஅள்ளி ஆகிய இரு கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட விவசாய மக்களின் நிலங்கள் மற்றும் வீடுகள் ரயில் பாதை அமைக்கும் பகுதியில் உள்ளதால் இந்த நிலங்களை கையகப்படுத்தும் பொழுது பொதுமக்களின் நிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
-
Parliament Winter session.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Morappur Dharmapuri Railway project lokshaba speech | மொரப்பூா் ரயில் திட்டம் pic.twitter.com/wen99RvmHN
">Parliament Winter session.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 4, 2023
Morappur Dharmapuri Railway project lokshaba speech | மொரப்பூா் ரயில் திட்டம் pic.twitter.com/wen99RvmHNParliament Winter session.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 4, 2023
Morappur Dharmapuri Railway project lokshaba speech | மொரப்பூா் ரயில் திட்டம் pic.twitter.com/wen99RvmHN
எனவே, இந்த இரு கிராம மக்களின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில், ரயில் பாதை அமையும் இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் அளவிற்கு வேறு பாதையில் ரயில் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்" என மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் புதுமண தம்பதி கொலை வழக்கு: 5 பேர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்