ETV Bharat / state

மருத்துவர்கள் அலட்சியதால் இளம்பெண்  இறந்ததாக கணவர் புகார் - பிரசவ வலி

தருமபுரி: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழந்ததாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜோதி
author img

By

Published : Aug 4, 2019, 5:12 PM IST

தருமபுரி மாவட்டம், செக்கோடி அடுத்த ஆலமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (29). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிக்கும் (24) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜோதி சிலமாதங்களுக்கு முன்பு பிரசவித்த நிலையில், நேற்றுமுன்தினம் பிரசவத்திற்காக தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் ஜோதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவருக்கு அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி ஜோதி உயிரிழந்தார்.

இதை கேட்டு வேதனையடைந்த காந்தி, தருமபுரி நகர காவல் நிலையத்தில் தன் மனைவிக்கு மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் தான் தனது மனைவி உயிரிழந்ததாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:tn_dpi_01_child_mother_death_img_7204444Body:tn_dpi_01_child_mother_death_img_7204444Conclusion:தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்க பட்ட பெண்: டாக்டர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தை, தாய் உயிழப்பு போலீசில் நடவடிக்கை கோரி புகார் .... தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த செக்கோடி அடுத்த ஆலமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் காந்தி வயது 29 .இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகள் ஜோதி வயது 24 . எம் காம் பட்டதாரியான இவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்நிலையில் ஜோதி கர்ப்பிணியானார். இவரை பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பிரசவ வலி அதிக அளவில் எடுக்கவே டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.நேற்று காலை 10 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை பிறந்தவுடன் இறந்துள்ளது. மேலும் அறுவை சிகிச்சையால் ஜோதிக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது தொடர் சிகிச்சையில் இருந்த ஜோதி சிகிச்சை பலனின்றிநேற்று இரவு 11மணியளவில் உயிரிழந்தார். இதனையடுத்து இன்று காலை உயிரிழந்த ஜோதியின் கணவர் காந்தி தருமபுரி நகர காவல் நிலையத்தில் தன் மனைவி ஜோதி க்கு டாக்டர்கள், செவிலியர்கள் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, அலட்சியப் போக்கால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் எனது மனைவி ஜோதி உயிரிழந்துள்ளார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் , செவிலியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.