தர்மபுரி: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டமேடு பகுதியில் சாலை விபத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தவிர்க்க தொப்பூர் கணவாய் வளைவு பாதைகளை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் முன்னதாக கோரிக்கை வைத்தனர்.
393 கோடி ரூபாய் செலவில் இந்த வளைவான பாதையை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எல்என்டி அலுவலர்களுடன் அதிக விபத்து ஏற்படும் இப்பகுதிகளை ஆய்வு செய்தார்.
புதியதாக திட்டமிடப்பட்டுள்ள பாதை குறித்த விவரங்களை அலவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் விரைவில் புதிய பாதையை அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு எப்போது?