ETV Bharat / state

காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்!

தருமபுரி: மக்களின் கோரிக்கையை ஏற்று காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவையை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

harma
dharma
author img

By

Published : Nov 23, 2020, 12:33 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் தேவை என பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு, காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்‌

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் எஸ்.பி.கார்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கோவிந்தசாமி, அரூா் சட்டப்பேரவை உறுப்பினா் சம்பத்குமார் ஆகியோர் உடனிருந்தனா்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.