ETV Bharat / state

தந்தையை கொலை செய்த மகன் கைது: போலீஸ் தீவிர விசாரணை! - குற்றச் செய்திகள்

தர்மபுரி: அரூர் அருகே மனநோயால் பாதிக்கப்பட்ட மகன், தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையை கொலை செய்த மகன் கைது: காரணம் என்ன? போலீஸ் தீவிர விசாரணை!

author img

By

Published : Jun 13, 2021, 4:27 PM IST

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65). இவர் தனது விவசாய நிலத்தில் தனியாக குடியிருந்து வந்தார்.

இவருக்கு மூன்று மனைவிகள், மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாம் மனைவிக்கு பிறந்த பழனி (35) என்பவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயராமனுக்குச் சொந்தமாக ஒன்பது ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சொத்தில் யாருக்கும் பங்கு இல்லை எனத் தெரிவித்து மனைவி, மகன், மகள்களை விட்டுவிட்டு அவருடைய விவசாய நிலத்தில் குடிசை வீட்டிலேயே தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், மனநோயால் பாதிக்கப்பட்ட பழனி, தந்தை ஜெயராமனை அரிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, மனநோயால் பாதிக்கப்பட்ட பழனியை கைது செய்த காவல் துறையினர், தந்தையை கொலை செய்த காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.