கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் இன்று(நவ.24) ஆராட்டு வைபவம் நடைபெற்றது.
அதில் மூலவர், மருங்கூரிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு மயிலாடி நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் தீர்த்தவாரி மடத்தில் எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: கந்தசஷ்டி விழா: முருகன் குன்றத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம்!