தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. இன்று (மார்ச் 5) அதிகாலை அம்மனுக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தொடர்ந்து கிராம மக்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர் கோயில்களில் கும்பாபிஷேகம்!