தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்த பானிபூரி கடை உரிமையாளர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பானிபூரி கடை உரிமையாளர், சென்னையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று, தருமபுரி திரும்பியுள்ளார்.
தருமபுரி திரும்பிய நபர் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா வைரஸ் பரிசோதனை மையத்துக்குச் சென்று சோதனை செய்துள்ளார்.
வைரஸ் பரிசோதனையின்போது, அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாததால் மருத்துவப் பணியாளர்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டுக்குத் திரும்பிய அவருக்கு இருமல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து ஆரம்ப சுகாதார மையத்தில் பரிசோதனை செய்துள்ளார். கரோனா வைரஸ் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 15 தினங்களுக்குப் பிறகு, மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 6 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் தருமபுரி மாவட்டம் மட்டும்தான், வைரஸ் தொற்று ஒற்றை இலக்கத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்