தர்மபுரி: கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஜூலை. 21) நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,266 கன அடி நீரும் கபினி அணையில் இருந்து 4,333 கன அடி நீரும் என மொத்தம் 6,599 கன அடி நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றில் திறந்துவிட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை முழுக் கொள்ளளவான 124.9 அடியில் 100 அடியை எட்டியுள்ளது. கபினி அணை முழுக் கொள்ளளவான 84 அடியில் 79 அடியை எட்டியுள்ளது.
இன்னும் இருவாரங்களுக்கு நீர் வரத்து 50 ஆயிரம் கன அடி வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் தடையை மீறி ஆயில் மசாஜ், போதைக் குளியல்: கண்டுகொள்ளுமா காவல் துறை?