தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 27, 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் பதிவாகும் வாக்குப் பொட்டிகளை பாதுகாக்கும் மையங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செயல் படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க:
பேனர் தடை எதிரொலி: தேர்தலுக்காக அச்சகங்களில் குவியும் வேட்பாளர்கள்!