தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மண் பாண்டங்களுக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இப்பகுதியில் அகல்விளக்கு, கொலுபொம்மைகள், பொங்கப் பானைகள், விநாயகர் சிலைகள் போன்றவை கைகளால் செய்யப்பட்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்துவகின்றனர்.
நாளொன்றுக்கு தனிநபர் சுமார் 500 முதல் 1000 அகல் விளக்குகள் வரை தயாரிக்கின்றார். அதியமான்கோட்டையில் ஐந்து வகையான அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய அகல் விளக்குகள் 1 ரூபாய்க்கும், பெரிய அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தத் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால், இது தற்போது நலிவடைந்து வருகிறது. பலரும் இத்தொழிலை விட்டுவிட்ட நிலையில் ஒரு சிலர் மட்டுமே, இத்தொழில் அழியாமலிருக்க இன்றளவும் இதனை செய்துவருகின்றனர். பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்கு அச்சு விளக்குக்குப் பதிலாக கைகளால் தயாரிக்கப்படும் மண் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றினால், நம் வீட்டுடன் மண் விளக்கு தயாரிக்கும் தொழிலாளா்கள் வீட்டிலும் விளக்கு எரியும்.
இதையும் படிங்க: கார்த்திகை தீபத் திருவிழா - 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!