ETV Bharat / state

மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்க 'புதுமை பாடசாலை' கண்காட்சி - முதலீடில்லா புத்தாக்கங்கள்

தருமபுரி: பள்ளி மாணவர்கள் புதுமையான முறையில் கல்வி கற்பதற்காக, முதலீடு இல்லா புத்தாக்கங்கள் எனும் மாவட்ட அளவிலான கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பிழையின்றி ஆங்கிலம் எழுத, படிக்கச் சுலபமான வழிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

innovation-school-exhibition-
innovation-school-exhibition-
author img

By

Published : Feb 13, 2020, 12:12 PM IST

கல்வி கற்பித்தலில் புதுமையான முயற்சிகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்கும் பள்ளிகளில் மகிழ்ச்சியான, அனுபவpபூர்வமான கற்றல் சூழலை வளர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவை இணைந்து, கல்வி முன்னேற்றத்திற்கான முதலீடு இல்லா புத்தாக்கங்கள் என்னும் மாவட்ட அளவிலான கண்காட்சி அதியமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தக் கண்காட்சியின் உதவி திட்ட அலுவலர் பா. வெங்கடேசன் கலந்துகொண்டார். மேலும் இக்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். கண்காட்சியாளர்களாக ஏராளமான ஆசிரியர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினர். பல ஆர்வமுள்ள ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நிர்வாக கல்வித் துறை அலுவலர்கள், உள்ளூர் தலைவர்கள் ஆகியோர் இதில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும் இந்தக் கண்காட்சிகள் மாநிலங்கள் அளவிலும் மாவட்ட அளவிலும் புதுமையான ஆசிரியர்களை ஒன்றிணைக்க ஒரு சிறந்த ஊடகமாகச் செயல்படுகின்றது. கண்காட்சியில் ஆசிரியர் புதுமையான கற்றல் முறைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர். மாணவா்கள் ஆங்கிலம் சரளமாகப் பிழையின்றி எழுத படிக்கச் சுலபமான வழிமுறைகளைக் காட்சிப்படுத்திருந்தனர்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், ”இந்தத் திட்டத்தின் நோக்கமானது மகிழ்ச்சியான, அனுபவப்பூர்வமான கற்றல் வகுப்பறைகளை உருவாக்குவதாகும். ரூபந்தர் என்பது ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியின் பன்முகம் கொண்ட திட்டமாகும். இது 2015ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கல்வியில் சிறந்த மாற்றம் கொண்டுவருவதற்காகத் தொடங்கப்பட்டது.

மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்க 'புதுமை பாடசாலை' கண்காட்சி

மேலும், பல்வேறு மாநிலங்களிலுள்ள சுமார் 50 மாவட்டங்களில் இக்கண்காட்சிகள் நடைபெற்றுள்ள நிலையில், 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உள்ளூரில் தங்கள் முதலீடு இல்லா கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் தங்களை நிரூபிக்கவும் இது ஒரு ஆக்கப்பூர்வமான தளமாகக் கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: விடுமுறைகால சதுரங்கப் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.