கா்நாடக மாநிலத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நேற்று (ஜூன்.22) தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.
ஆர்ப்பரித்துக் கொட்டும் ஒகேனக்கல் அருவி
நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று(ஜூன்.23) காலை நிலவரப்படி தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதிக்கு நீர் வரத்து 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்ததால், ஒகேனக்கல் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
அதிகரிக்கும் நீர்வரத்து
கடந்த 8 மாதமாக ஒகேனக்கல் ஐவர் பவனி பகுதிகளில் நீர் வரத்து இன்றிக் காணப்பட்டது. தற்பொழுது நீர்வரத்து அதிகரித்ததால், ஐவர் பவனி பகுதிகளில் நீர் விழுவது அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'அணில விடுங்க... அதிமுகவிடம் கேள்வி கேளுங்க' - ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி