தர்மபுரி: கர்நாடக மாநிலம் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று(நவ.14) திடீரென அதிகரித்துள்ளது.
நேற்று(நவ.13) ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனிடையே இன்று 10 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு தற்போது வந்து கொண்டிருப்பது மழைநீர் என்பதால் தண்ணீர் கலங்கல் நிறமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் நீர்வரத்து உயர்ந்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதையும் படிங்க:மாணவியின் இறுதி ஊர்வலம் - கண்ணீர்விட்ட கோவை மக்கள்