தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து தொடர்ந்து குறையத் தொடங்கி நீர்வரத்து ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது.
இதனிடையே, பொங்கல் பண்டிகையின் போது நான்கு நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகை தர மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து இரண்டாயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்த தடை நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக பகுதியிலிருந்தும் ஒகேனக்கலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக நீர்வீழ்ச்சியில் குளித்தும் படகு சவாரி செய்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை