கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக திகழும் தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கினை முழுமையாகக் கடைப்பிடிக்க காவல் துறையினர் சீரிய முயற்சி எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவிற்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் ஒருவர் கார் ஓட்டப் பழகியுள்ளார்.
இது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகி கார் ஓட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் கடும் இழப்பு: 6 மாதங்களுக்கு சுங்கக் கட்டண வசூலை நிறுத்தக் கோரிக்கை!