தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பத்ரகாளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கவுண்டர். இவர் 20 செம்மறி ஆடுகளை வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 1) வழக்கம்போல் ஆடுகளை மேய்த்துவிட்டு தனது வேளாண் நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் காலையில் தனது ஆட்டுப்பட்டியில் வந்து பார்த்தபோது, 11 ஆடுகள் குடல் தெரியும் அளவு, அடையாளம் தெரியாத விலங்கு கடித்து ரத்தம் உறிஞ்சி உயிரிழந்த கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து வனத் துறை, கால்நடை துறைக்குத் தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை ஆய்வுசெய்து ஆடுகளைப் புதைக்க அறிவுறுத்தினர்.
இதனையடுத்து குழிதோண்டி உயிரிழந்த 11 ஆடுகளையும் புதைத்தனர். அடையாளம் தெரியாத விலங்கு கடித்து 11 ஆடுகள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...புகார் அளிக்காமலிருக்க பெண் எஸ்பியின் காலில் விழுவதாக கூறிய டிஜிபி