ETV Bharat / state

'மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்': திமுக எம்.பி.

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான கருவிகள், மேல் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் உறுதியளித்துள்ளார்.

dmk mp
author img

By

Published : Sep 14, 2019, 5:07 PM IST

தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பறைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், சில இடங்களில் பழுதாகி உள்ளது. இதனை ஆய்வு செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தருமபுரி மாவட்டம் பின்தங்கி இருப்பதால், நெற்குந்தி பகுதியில் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாட மையம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

dmk mp

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான கருவிகள், மேல் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.

Intro:tn_dpi_01_dmk_mp_senthilkumar_vis_7204444

Body:tn_dpi_01_dmk_mp_senthilkumar_vis_7204444

Conclusion:

முதல்வன் திரைப்பட பாணியில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.

தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று தருமபுரி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.நகராட்சிக்குபட்ட கட்டண கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு பலர்  புகாரை தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக  இன்று திடீரென தருமபுரி பேருந்து நிலையங்களில் உள்ள கட்டண கழிப்பிடங்கள், மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் திடீரென ஆய்வு செய்தார். நகராட்சி கட்டண கழிப்பிட குத்தகைதாரிடம் அசுத்தமாக உள்ள கழிப்பிடத்தை ஏன் தூய்மை செய்ய வில்லை உள்ளே உடைந்து உள்ள டைல்ஸ்களை அப்புறப்படுத்தி அவற்றை பழுது பார்க்க வேண்டும் என்றும் முடியவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஈடாய்லெட் முறையில் புதுப்பிப்பதாக தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பறைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், சில இடங்களில் பழுதாகி உள்ளது. இதனை ஆய்வு செய்து, அந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அழைத்து, சீரமைப்பு செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  இதை சரிசெய்வதற்கு மூன்று மாத காலம் அவகாசம் கேட்கிறார்கள். அவர்கள் சரி செய்யவில்லை என்றால், தமிழகத்தில் முதல் நகராட்சி என்ற பெயர் பெற்ற தருமபுரியில், நவீன முறையில், விமான நிலையங்களில் உள்ளது போன்று, சுகாதாரமான கழிப்பறை வசதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்து தரப்படும் என தெரிவித்தார். 

மேலும் தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் பணிகள் விரைவில் தொடங்க வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். அவர்கள் விரைந்து நிலத்தை கையகப்படுத்தி பணிகளை தொடங்கி இந்த ஐந்து ஆண்டிற்குள் முடித்துக் கொடுப்பதாக,  உறுதி அளித்துள்ளார்கள்.  மேலும் தருமபுரி மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் என்பதால் கடந்த 2009-2014 ஆண்டில் தருமபுரி நெற்குந்தி பகுதியில் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாட மையம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட  ராணுவ தளவாட மையம், கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார். 

மேலும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான கருவிகள், மேல் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.