தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இருநாள்களாக மழை பெய்துவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, பிலிகுண்டு, நாற்றம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து உயர்ந்தது. கர்நாடக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரத்து 309 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழையும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரும் ஒகேனக்கல் நீர் வரத்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 16 ஆயிரம் கன அடியாக தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று (செப்.1) ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று (செப்டம்பர்2) 11 ஆயிரம் கனஅடி நீராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைந்தது