தர்மபுரி: விடுமுறை நாள்களில் ஒகேனக்கல் அருவியில், ஆயில் மசாஜ் செய்து குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காகவும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில், தற்போது கோடை வெப்பம் வீசத் தொடங்கியுள்ளதால், வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டும் ரசித்தனர். இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு