கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து வந்தது.
![ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11:44:09:1595312049_tn-dpi-01-hoganakkal-water-news-vis-7204444_21072020111138_2107f_1595310098_725.jpg)
தண்ணீர் வரத்து நேற்று (ஜூலை 20) 5 ஆயிரத்து 700 கன அடியாக இருந்தது. காவிரி கரையோர பகுதிகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகள், ஒகேனக்கல் காட்டுப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக இன்று (ஜூலை 21) ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 1,300 கனஅடி நீர் உயர்ந்து 7 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு 7 ஆயிரம் கனஅடி நீர் வருவது குறிப்பிடத்தக்கது.
![ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11:44:08:1595312048_tn-dpi-01-hoganakkal-water-news-vis-7204444_21072020111138_2107f_1595310098_985.jpg)