தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வெளியேற்றப்பட்டது.
அதன் காரணமாக தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக இருந்தது. நள்ளிரவு முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
அணைப்பகுதியில் மழை தொடர்ந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஒகேனக்கல். ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஒகேன்னக்கல்லில் ஆர்ப்பரித்து ஓடும் காவிரி...