தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி இலக்கியம்பட்டியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியர் பங்குபெறும் இந்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
இந்த கண்காட்சியில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சாமியாபுரம் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி தியா விவசாயத்திற்கு உதவும் வகையிலான ரோபோட்டை உருவாக்கியுள்ளார். ஸ்பிரே ரோபோட் என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த ரோபோட் வயல்வெளிகளில் மருந்து தெளிப்பது, விதை விதைப்பது , மண்ணின் வெப்பநிலையை அறிவது என மூன்று செயல்பாடுகளும் சூரிய மின்சக்தி மூலம் ஒரே கருவியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவியின் கண்டுபிடிப்பான இந்த விவசாய ரோபோட் பார்வையாளர்களையும் பள்ளி மாணவர்களையும் வெகுவாக கவர்ந்ததுள்ளது.
இந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சியில் தருமபுரி மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் உருவாக்கியுள்ள 95 வகையான அறிவியல் படைப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பொருளாதார வல்லுநர்களை விமர்சிக்கும் பாஜக அமைச்சர்கள் - சிதம்பரம் கருத்து!