தருமபுரி: சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாளான இன்று (அக். 7) அமைச்சர் கே.பி அன்பழகன் இன்று(அக்.4) மரியாதை செலுத்தினார்.
சுப்பிரமணிய சிவா 1984 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் அக்டோபர் 4ஆம் தேதி பிறந்தார். இவர் மிகப் பெரிய எழுத்தாளர் ஆவார். சுப்பிரமணிய சிவா தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் நாற்பதாவது வயதில் தொழு நோய் பாதிப்பால் மறைந்தார். பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா நினைவாக தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைத்துள்ளது.
இந்நிலையில் இன்று (அக் 4) சுப்பிரமணிய சிவாவின் 137ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் சிவாவின் மணிமண்டபத்தில் உள்ள படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன், தருமபுரி பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் டி ஆர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி மறைவு- தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பத்தாம் நாள் சடங்கு!