ETV Bharat / state

Tomato price: வெயிலோடு விளையாடி, வெற்றித் தக்காளி பறித்த விவசாயி - மத்தான் கொட்டாய் பகுதி

தக்காளி விலை அதிகரித்து வரும் சூழலில், இனி சாகுபடி செய்து வரும் விளைச்சல் மூலமாக மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஒட்டுமொத்த விவசாயிகளும் வெயிலில் தக்காளிச் செடிகளை பறிகொடுத்த நிலையில், சாமர்த்தியமாக செடிவளர்த்து லாபம் பார்க்கும் விவசாயியின் கதையை இந்தத் தொகுப்பில் காணலாம்.

வெயிலை வென்று தக்காளி சாகுபடி செய்த விவசாயி

author img

By

Published : Jun 29, 2023, 10:29 PM IST

வெயிலை வென்று தக்காளி சாகுபடி செய்த விவசாயி

தருமபுரி: தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் அளவில் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து அறுபது ரூபாய் என்ற அளவில் தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்டு, உழவர் சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கும், வெளிச்சந்தையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகும். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பேகார அள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகள் பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரத்யேக தக்காளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குத் தக்காளி பழங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

எனவே, தக்காளி விலை உயர்வுக்கான காரணம் அறிய இந்த விவசாயிகளை நாடினோம். தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், செடிகளில் போதுமான அளவு காய்ப்பு திறன் இல்லாததால் குறைந்த அளவிலேயே தக்காளி மகசூல் கிடைக்கின்றது.

இந்த ஆண்டு கோடை வெயில் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியதன் காரணமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாய நிலங்களிலேயே கருகியது என விவசாயிகள் கூறினர்.

இதனால் தக்காளி நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாகத் தான் தக்காளி நடவு செய்ய விவசாயிகள் முன் வரவில்லை. சாகுபடி பரப்பு குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. தருமபுரி மாவட்டம், மத்தான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயி வெயிலில் இருந்து தக்காளி செடிகளைக் காப்பாற்ற மாற்று யோசனை செய்து தற்போது தக்காளியை அறுவடை செய்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ''கடந்த மார்ச் மாதத்தில் தக்காளி நடவு செய்தபோது வெயில் காரணமாக விவசாய வயலிலேயே கருகியது. அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் இருந்து 12,000 எண்ணிக்கையிலான தக்காளி செடிகளை வாங்கி வந்து நடவு செய்தேன். வெயிலின் காரணமாக தக்காளிச் செடிகள் காயத் தொடங்கியதை அடுத்து கால்நடைத் தீவனமான சோளத் தட்டுகளை விதைத்ததால் வேகமாக வளர்ந்து தக்காளிச் செடிகளுக்கு நிழல் ஏற்படுத்தும் என எண்ணி சோளத் தட்டுகளை இடையிடையே விதைத்தேன்.

அதையடுத்து அருகில் இருந்த தக்காளிச் செடிகள் காயாமல் நன்றாக வளர்ந்து வந்ததன” எனத் தெரிவித்தார்.

மேலும், தற்போது செடிகளில் பழங்கள் பழுக்கத் தொடங்கியதை அடுத்து நிழலுக்காக நடப்பட்ட சோளத் தட்டுகளை அறுத்து அகற்றியதாகவும் கூறினார். தக்காளி விலை இன்னும் இரண்டு மாதத்திற்கு குறையாது என்றும்; தற்பொழுது மழைக்காலம் தொடங்கியதால் விவசாயிகள் இனி வரும் காலங்களில் தக்காளி நடவு செய்து அதன் மூலம் கிடைக்கும் பழங்களால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் சமயோசித செயலால் தக்காளிச் செடிகளை காப்பாற்றிய சேகர், தற்போது லாபத்தை அள்ளி வருகிறார்.

இதையும் படிங்க: TNJFU: அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படும் அலுவலர்கள்.. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.