ETV Bharat / state

நிதின் கட்கரியின் பேச்சுக்கு விவசாயிகள் போர்கொடி! - விவசாயிகள் போராட்டம்

தருமபுரி: சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் புதுப்பட்டியில் போராட்டம் நடத்தினர்.

நிதின் கட்கரியின் பேச்சுக்கு விவசாயிகள் போர்கொடி!
author img

By

Published : Apr 15, 2019, 12:48 PM IST

சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குடும்பம் குடும்பமாக போராட்டம், கருப்பு கொடி போராட்டம், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி என பல்வேறு முறைகளில் போராடி வருகின்றனர்.

இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட போது மத்திய அரசு இந்த திட்டம் வளர்ச்சி திட்டம் என நீதிமன்றத்தில் நியாயப்படுத்தியது. இந்த நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், விவசாயிகள் வனப்பகுதி நிலங்களை அரசு ஆக்கிரமிப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த நீதிமன்ற தீர்ப்பு விவசாயிகளுக்கு பெருமகிழ்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் போது, எட்டுவழிச்சாலைத் திட்டம் நல்ல திட்டம். அது விரைவில் விவசாயிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இது விவசாயிகளின் மத்தியில் பெரும் அச்சத்தையும், பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடாக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், அவ்வியக்கத்தின் பொருப்பாளர் பழனியப்பன், வேலு, ஆசிரியர் அருள் ஆகியோர் தலைமையில், மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுப்பட்டியில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, மஞ்சவாடி, பாப்பம்பாடி, பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றுக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அமைச்சரின் பேச்சுக்கு 8 வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் கருப்பு கொடியேந்தி போராட்டம்.

சென்னை முதல் சேலம் வரை 8 வழி சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்து ஒரு வருடமாக அத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் குடும்பம் குடும்பமாக போராட்டம் கருப்பு கொடி போரட்டம் உடலில் மண்ணென்னை ஊற்றி தீ குளிக்க முயற்சி என பல்வேறு முறைகளில் போரட்டத்தை கையில் எடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின் அரசும் இந்த திட்டம் வளர்ச்சி திட்டம் என நீதிமன்றத்தில் நியாயப்படுத்தியது. இந்த நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் விவசாயிகள் வன பகுதி நிலங்களை  அரசு எடுக்க திட்டமிட்ட நிலப்பகுதியை எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த நீதிமன்ற தீர்ப்பு விவசாயிகளுக்கு பெருமகிழ்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று அ.தி.மு.க கூட்டணி  வேட்பாளர்களை  ஆதரித்து மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி .முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க.நிறுவனர் இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் மத்திய அமைச்சர் பேசுகையில் 8 வழி சாலையை நல்ல திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார்.விவசாயிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று பேசினார்.

இவரது இந்த பேச்சு விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பெரும் கோபத்தையும் கிழப்பியுள்ளதை அடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி. கவுண்டம்பட்டி .புதுப்பட்டி மஞ்சவாடி. பாப்பம்பாடி, பள்ளிப்பட்டி. பகுதியை சார்ந்த 50க்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 8 வழி சாலை எதிப்பு இயக்கம் சார்பில் 8 வழி சாலை எதிப்பு இயக்க பொருப்பாளர் பழனியப்பன்.வேலு ஆசிரியர் .அருள். ஆகியோர் தலைமையில்புதுப் பட்டியில் ஒன்று கூடி மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி கோஷம் எழுப்பினர்.

--

B.Gopal
ETV BHARAT TRAINEE  REPORTER
DHARMAPURI
CELL. 9442854640
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.