சென்னையிலிருந்து சேலம்வரை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமைச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 53 கி.மீ தூரம் 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் என பல்வேறு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, பாப்பிரெட்டிபட்டி, அரூர் பகுதிகளில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உற்சாகம் பொங்க ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.