தர்மபுரி: அதியமான் கோட்டை அருகே சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் ஆலயம் உள்ளது.
தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாட்டுக்கு சிறந்த நாள். இந்த கோயிலுக்கு கர்நாடக உள்ளிட்ட மாநில அரசியல் பிரபலங்கள் அடிக்கடி வந்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
வழிபாடு
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் காலபைரவர் ஆலயத்தில் ஜன.25ஆம் நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சா்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஒ.எஸ்.மணியன் காலபைரவர் ஆலயத்தில் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீனதயாள் உபாத்தியாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இருக்கை