ETV Bharat / state

18 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி - கிடாவெட்டி  இயற்கைக்கு நன்றி சொன்ன மக்கள்! - தருமபுரி

தருமபுரி:  பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிடமனேரி ஏரி நிரம்பி வழிந்ததால் ஊர் பொதுமக்கள் ஆட்டுக்கிடாவை வெட்டி வழிபாடு செய்தனர்.

Lake leakage
author img

By

Published : Sep 26, 2019, 2:41 PM IST

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிடமனேரி ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தருமபுரியில் பெய்த மழையின் காரணமாக, இன்று ஏரி அதன் முழு கொள்ளளவை அடைந்து, உபரி நீர் வெளியேறி வருகிறது. இதையடுத்து, ஏரிக்கு அருகில் உள்ள சுற்றுப்புற கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் சிறப்பு பூஜை செய்து ஆட்டுக்கிடாவை வெட்டி வழிபாடு செய்தனர்.

Eighteen years later, the lake is packed with special water  Pidamaneri  பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பிடமனேரி ஏரி  Dharmapuri  தருமபுரி  கிடா வெட்டி சிறப்பு வழிப்பாடு
நிரம்பி வழியும் பிடமனேரி ஏரி

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஏரியைத் தூர்வார அனுமதி கோரியதாகவும்; ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வந்ததையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், அவை முறையாக நடைபெறாமல் ஏரியின் உட்புறம் உள்ள கருவேல முட்களை மட்டுமே அகற்றியுள்ளனர். தற்போது மழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் அதிக அளவு வந்து உள்ளது. தாங்கள் கூறியபோது குடிமராமத்துப் பணி செய்திருந்தால், ஏரிப்பகுதி ஆழப் படுத்தப்பட்டிருக்கும். வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு ஏரிப்பகுதியில் அதிக அளவு தண்ணீரை சேமித்து இருக்க முடியும்.

ஏரி நிரம்பியதால், கிடா வெட்டி சிறப்பு வழிபாடு

இந்நிலையில், குடிமராமத்துப் பணிகள் சரிவர நடைபெறாத காரணத்தால், தற்போது குறைந்த அளவு பெய்த மழைக்கே தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது என கூறுகின்றனர். மேலும் இந்த ஏரி ஒருமுறை நிறைந்தால் சுற்றுப்புற கிராம மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது. எனவே இனிவரும் காலங்களிலாவது பொதுமக்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Intro:tn_dpi_01_heavy_rain_lakewater_full _vis_byte_7204444

Body:tn_dpi_01_heavy_rain_lakewater_full _vis_byte_7204444

Conclusion:

18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய  பிடமனேரி ஏரி ஊர் பொதுமக்கள் ஆடு பலியிட்டு வழிபாடு. தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிடமனேரி ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.கடந்த ஒரு வாரமாக தர்மபுரியில் பெய்த மழையின் காரணமாக இன்று ஏரி அதன் முழு கொள்ளளவை அடைந்து  உபரி நீர் வெளியேறி வருகிறது.இதனை அடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி யில் தண்ணீர் நிரம்பியதால்   சிறப்பு பூஜை செய்து ஆட்டுக்கிடா பலியிட்டு வழிபாடு நடத்தினர். இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் பேசும்போது.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரிய தாகவும் ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிக்கு நிதி ஒதுக்கிய தாகவும் அவை முறையாக நடைபெறாமல் ஏரியின் உட்புறம் உள்ள கருவேல முள் களை மட்டுமே அகற்றினர்.தற்போது மழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் அதிக அளவு வந்து உள்ளது. தாங்கள் கோரியபோது குடிமராமத்து பணி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி இருந்தால் ஏரிப்பகுதி ஆழப் படுத்தப்பட்டிருக்கும் வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு ஏரி பகுதியில் அதிக அளவு தண்ணீரை சேமித்து இருக்க முடியும் குடி மராமத்து பணி நடைபெறாத காரணத்தால் தற்போது குறைந்த அளவு பெய்த மழைக்கே தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது இந்த ஏரி ஒருமுறை நிறைந்தால் சுற்றுப்புற கிராம மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது எனவே இனிவரும் காலங்களிலாவது பொது மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.