தருமபுரி மாவட்டம் புறநகர்ப் பேருந்து நிலையத்திலிருந்து ஒகேனக்கல்லுக்குப் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், நகரப் பேருந்து நிலையம், புறநகர்ப் பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புலிப் பல், பாசிமணி போன்றவற்றை நரிக்குறவர் இன மக்கள் விற்று பிழைத்துவருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலைச் செய்துவருகின்றனர். பேருந்துப் போக்குவரத்து தொடங்கியதும் மீண்டும் பணிக்காக வேறு இடத்திற்குத் திரும்ப நரிக்குறவர் மக்கள் ஆர்வம் காட்டினர். இதையடுத்து, தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து ஒகேனக்கல் பேருந்தில் நரிக்குறவர் மக்கள் தங்கள் குழந்தைகளோடு ஏறினர்.
அப்போது, பொதுமக்கள் பேருந்தில் ஏறும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்தவர்கள், ’எங்களுக்கு கரோனா வராது. அந்தக் காலத்திலிருந்து ஊட்டச்சத்துகளை எங்களுக்கு அதிகமாக வழங்கிவருகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுப்பார்கள். அதனால் கரோனா வராது’ எனச் சிரித்துக்கொண்டே பேருந்தில் ஏறினர்.
கரோனா தொற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நபர்களுக்கும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லையென்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அரசு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.
இதையும் படிங்க:'சங்கு ஊதி மண்ணில் புரளுங்கள்; கரோனா வராது!' - மக்களை குழப்பும் பாஜக தலைவர்கள்