தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு தென்பெண்னை ஆறு முக்கிய ஆதாரமாக உள்ளது. கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி வருகிறது.
கர்நாடக அரசு தடுப்பணை கட்டினால் ஐந்து மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டிக்காத அதிமுக அரசைக் கண்டித்து மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட திமுக செயலாளரும், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடங்கம் சுப்பிரமணி, 'கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அதிமுக அரசு கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், ஐந்து மாவட்ட விவசாயிகளுடன் சேர்ந்து மீண்டும் திமுகவினர் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்' என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென்பெண்ணையாறு விவகாரம் - திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி யோசனை