தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், ‘கோபிநாதம்பட்டி கூட்ரோடு சுற்றுப்புற 5 கிலோ மீட்டர் பரப்பளவில் கிராமப்புறங்கள் அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் இந்தியன் வங்கி கிளை மட்டும் உள்ளது. வங்கியை பயன்படுத்தும் பொது மக்கள் அதிகமாக இருப்பதால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க வேண்டும்.
இப்பகுதியில் வங்கி தொடங்கினால் பொது மக்களின் போக்குவரத்து நேரமும் குறையும், பால் உற்பத்தியாளர்கள், சுய உதவி குழுக்கள், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வர்த்தகர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தொழில்முனைவோர் எனப் பல்வேறு வகையில் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பிகில்’ வெற்றிக் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயம் வழங்கிய விஜய் ரசிகர்கள்!