தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏமக்குடியூர் சந்திப்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏசி வசதியுடன் கூடிய ஈரடுக்கு பேருந்து நிறுத்தத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் மற்ற பேருந்து நிறுத்தங்களைப் போல் இல்லாமல் கீழ்த் தளத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு ஏதுவாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் படிப்பதற்கு சில புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது மேலும் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக சோபா செட் (Sofa set) மற்றும் தாய் சேய் ஓய்வு அறையும் (Breastfeeding room) அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிறுத்தத்திற்கு வெளிப்புறம் சிறிய அளவில் தேநீர் மற்றும் ஐஸ்கிரீம் கடையும், ATM இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி, இந்த பேருந்து நிறுத்தம் சூரிய மின்சக்தியால் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் இப்பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கான விருந்தில் இதுதான் ஸ்பெஷல் - ஜில் பைடன் தயாரித்த சூப்பர் மெனு!
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, மேலையனூர் பகுதியைச் சேர்ந்த அப்பாவு. திமுகவின் உறுப்பினரான அப்பாவு இன்று (ஜூன் 22) புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் நுழைவாயிலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது கோரிக்கையைக் கேட்டனர். அப்போது அவர், "பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தைப் பெரிய அளவியலாக வைத்து அதற்கு மின் விளக்கு அமைக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.மேலும், அந்த நபர் தனது கோரிக்கையை வலியுறுத்தி சுமார் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து எழுந்து சென்றார். திமுகவை சேர்ந்த நபர், தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடிக்குக் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் நுழைவாயிலில் 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்' புகைப்படத்தைப் பெரிய அளவில் அமைக்கக் கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Titanic : இறுதி நிமிடங்களை நெருங்கும் டைட்டானிக் சுற்றுலா.. 5 கோடீஸ்வரர்கள் உயிர் பிழைப்பார்களா?