2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரின் பிரச்னைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (நவ.06) தர்மபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்களும் விவசாயிகளும் தங்களது பிரச்னைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர். குறிப்பாக கோரிக்கை மனுக்களில் ஒகேனக்கல் பகுதியில் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு பெரும்பாலானோர் கோரியிருந்தனர்.
மேலும் கூட்டத்தில் எம்.பி., திருச்சி சிவா, டி.கே.எஸ் இளங்கோவன், மருத்துவர் செந்தில் குமார், எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது- ஸ்டாலின்!