தர்மபுரி: மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார்.
மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திருத்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பட்டியலைப் பெற்று கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 12 லட்சத்து 35 ஆயிரத்து 534 மொத்த வாக்காளர்கள். அதில், 6 லட்சத்து 27 ஆயிரத்து 332 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 8 ஆயிரத்து 64 பெண் வாக்காளர்களும், 138 இதர வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதி
- மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 183
- ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16ஆயிரத்து 957
- பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 210
- இதர வாக்காளர்கள் 16
பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி
- மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 647
- ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 888
- பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 752
- இதர வாக்காளர்கள் 7
தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதி
- மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 62 ஆயிரத்து 366
- ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 658
- பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 607
- இதர வாக்காளர்கள் 101
பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி
- மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 59ஆயிரத்து 457
- ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 571
- பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 879
- இதர வாக்காளர்கள் 7
அரூர் சட்டப்பேரவைத் தொகுதி
- மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 881
- ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258
- பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 616
- இதர வாக்காளர்கள் 7
அதிமுக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டார்.