தர்மபுரி: அரசுக் கலைக்கல்லூரி தடுப்பூசி முகாமில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கரோனாதடுப்பூசி மையம் பொதுமக்கள் வசதிக்காக இன்று (ஜூன் 16) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசுக் கலைக்கல்லூரி கலை அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று (ஜூன் 16) காலை 6 மணி முதலே 3 மணி நேரம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காலை ஒன்பது மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் காலை 6 மணிமுதலே வரிசையில் காத்திருந்தனர். மூன்று மணிநேர காத்திருப்புக்கு பின் காலை 9 மணிக்கு முகாம் தொடங்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். இன்று (ஜூன் 16) ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை முதல் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: கரோனாவால் இறந்தவர் உடலை எடுத்துச் சென்ற அரசு அமரர் ஊர்தி மீது தாக்குதல்!