ETV Bharat / state

தர்மபுரி தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு - pennagaram

தர்மபுரி அருகே தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயா்ந்துள்ளது.

தருமபுரி தேர்சாதருமபுரி: தேர்சாய்ந்த விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 3 ஆக உயர்வுய்ந்த விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தருமபுரி தேர்சாய்ந்த விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
author img

By

Published : Jun 17, 2022, 9:56 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில், கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது, நிலைதடுமாறி தேர் சாய்ந்து பொதுமக்கள் மீது விழுந்தது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் மனோகரன் மற்றும் சரவணன் ஆகிய இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த நான்கு நபர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெருமாள் என்ற நபர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 17) உயிரிழந்தார். இதனால், இந்த தேர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தர்மபுரி தேர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.