தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை, 23 வயது நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரையடுத்து, ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கரண் (23) என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.