ETV Bharat / state

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை கடிதம்! - Central minister l murugan

மத்திய இணை அமைச்சர் எல். முருகனை சந்தித்து தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் அகில இந்திய வானொலி ஒலிபரப்பு குறித்து கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்தார்.

Etv Bharatமத்திய அமைச்சர் எல்.முருகனிடம் தர்மபுரி எம்பி செந்தில்குமார் கோரிக்கை கடிதம்

author img

By

Published : Aug 4, 2022, 6:19 PM IST

Updated : Aug 4, 2022, 7:47 PM IST

தர்மபுரி: தர்மபுரி அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தெளிவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. வானொலி நிலையத்திலிருந்து விவசாயம், பொழுதுபோக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தயார் செய்து காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒலிபரப்பப்பட்டு வருகின்றனர்.

தர்மபுரி அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்பினை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள நேயர்கள் வரை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு தரத்தினை மேம்படுத்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை டெல்லியில் சந்தித்து கடிதம் வழங்கினார். அக்கடிதத்தில், ‘தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்ட மக்களின் முக்கிய தகவல் ஆதாரமாக தர்மபுரி அகில இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை விளங்குகிறது.

எம்பி செந்தில்குமார் கோரிக்கை கடிதம்
செந்தில் குமார் எம்.பி. கோரிக்கை கடிதம்

இதன் ஒலிபரப்பால் உள்ளூர் விவசாயிகள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பொதுமக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். கரோனா காலத்தில் அரசின் விழிப்புணர்வு உள்ளிட்டவை மக்களிடம் சென்று சேர வானொலி முக்கியப் பங்காற்றியது. 2019ஆம் ஆண்டு என் தொடர் முயற்சியால் தர்மபுரி வானொலி நிலையம் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மாலை ஒலிபரப்பைத் தொடங்கியது.

எம்பி செந்தில்குமார் கோரிக்கை கடிதம்
செந்தில் குமார் எம்.பி. கோரிக்கை கடிதம்

தற்போது தர்மபுரி நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரித்து முழு நேரமாக செயல்பட்டு வருகிறது. தர்மபுரி அகில இந்திய வானொலி நிலையம் கடந்த ஆண்டில் 60 லட்சம் வரை வருவாய் ஈட்டி, பல நகர்ப்புற வானொலி நிலையங்களைவிட கூடுதலாக வருவாய் பெற்றுள்ளது. ஆனால், தர்மபுரி வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு நேரத்தை 4 மணி நேரமாக குறைக்க அறிவுறுத்தியதாக என் கவனத்திற்குத் தகவல் வந்தது.

இது மிகவும் தன்னிச்சையானது. பொது சேவை ஒலிபரப்பின் கட்டளைக்கு எதிரானது. 2021இல் மத்திய அமைச்சருக்கு தர்மபுரி அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பு தரத்தை மேம்படுத்த கடிதம் எழுதி இருந்தேன். அதன்படி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டிப் பகுதிகளுக்கு வானொலி நிகழ்ச்சி தெளிவாக கிடைக்கும்படி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். நிகழ்ச்சிகளை தற்போது உள்ள நிலையில் தொடர வேண்டும்’ என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில்குமார் மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ரூ.30 கோடி மதிப்பிலான வருவாய் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

Last Updated : Aug 4, 2022, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.