தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் மே 11ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மரை திருத்தேரில் வைத்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இந்த திருத்தேர் விழாவில் தருமபுரி மாவட்டம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர்.