தர்மபுரி: தர்மபுரியில் மாவட்டம் ஏ.ரெட்டி அள்ளி சோகத்தூர் டி.என்.சி திடலில் வருகிற 13ஆம் தேதி நடைபெற்றவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், தர்மபுரி ஏ.ரெட்டி அள்ளி சோகத்தூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். தர்மபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவசர கால சிகிச்சைக்காக 108ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆறும், 30 மருத்துவக் குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 8 எல்இடி திரைகள் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியினை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கிடவேண்டும்" என்றார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தர்மபரி சார் ஆட்சியர் மு. பிரதாப், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு. இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சருடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தர்மபுரி எல்லையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு