தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவா், உம்பியம்பட்டி அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவருகிறார். சேலத்தில் சேர்ந்த தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு (Thalasaemisa) ரத்த அணுக்கள் எண்ணிக்கை குறைந்து, உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா நோய்தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக, ரத்ததானம் செய்வோர் முன்வராத காரணத்தால் உடனடியாக ரத்தம் கிடைக்கவில்லை. சேலத்தில் போதுமான அளவில் ரத்தம் இருப்பில் இல்லாத காரணத்தால் குழந்தையின் பெற்றோர் பல இடங்களில் ரத்த தான உதவி கோரியிருந்தனா்.
இந்நிலையில், ரத்த தேவை குறித்து நண்பர்கள் வழியே அறிந்த தகவல் ஆசிரியா் ராதாகிருஷ்ணன் தருமபுரியில் உள்ள ஒரு ரத்த வங்கிக்கு சென்று ரத்தம் வழங்கினார். கொடையாக வழங்கிய ரத்தம் சேலம் மாவட்டத்திற்குக் கொண்டு சென்று குழந்தைக்குச் சிகிச்சை அளித்ததால் குழந்தை அபாயக் கட்டத்தில் இருந்து நலம் பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த குழந்தைக்கு தருமபுரியிலிருந்து, ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தக்க நேரத்தில் ரத்த தான உதவிசெய்து பாராட்டுகளைக் குவித்துள்ளது.
இதையும் படிங்க : குமரியில் வெளி மாவட்டத்திலிருந்து வந்த 223 பேர் தனிமை!