சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து எட்டு வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயிகளை துன்புறுத்தாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்றலாம் என அறிவுறுத்தியது. தற்போது கரோனா தடுப்பு பொது முடக்கம் அமல்படுத்தப்படுள்ள நிலையில், மத்திய அரசு விவசாயிகளை கேட்காமல் அரசுக்கு தேவையான நிலத்தை தாங்களே எடுத்துக் கொள்ள புதிய சட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து அரூர் அடுத்த மாலகப்பாடி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது, இந்த திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசமி உள்ளிட்டோர் அழிந்து போகவேண்டும் என விவசாயிகள் சாபமிட்டனர்.
இதையும் படிங்க: எட்டு வழிச் சாலை எதிர்ப்பு- கை, காலில் கருப்புத் துணி கட்டி விவசாயிகள் ஆர்பாட்டம்