தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகள், தமிழ்நாடு காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக - தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு இன்று (நவ.20) 73 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீரின் அளவு அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினிஅருவி, ஐவர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பகுதியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க:ஒகேனக்கல் அருவியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்